குளிர்வித்த மழை விழுந்த ப்ளக்ஸ்
பழநி: பழநியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயிலின் தாக்கம் இருந்தது. காலை முதலே வெயில் சுட்டெரித்த நிலையில் மாலைக்கு மேல் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராஜாஜி ரோடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த ப்ளக்ஸ் போர்டு சரிந்தது. வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.