மேலும் செய்திகள்
புதுரோட்டிற்கு கிடைத்தது நிழற்கூடம்
30-Nov-2024
வேடசந்துா : பூத்தாம்பட்டியில் புதிய சமுதாயக்கூடம் அமைப்பதற்கான பணியை எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார்.வேடசந்தூர் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் ஊராட்சி பூத்தாம்பட்டி காலனியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம் சொந்த நிதியை அரசுக்கு செலுத்தி ரூ.40 லட்சம் திட்ட மதிப்பில் சமுதாய கூடம் கட்டும் பணியை வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார்.ஒன்றிய குழு தலைவர் சவுடீஸ்வரி, பேரூர் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் முருகவேல் வரவேற்றார்.தி.மு. க., நிர்வாகிகள், பிரியம் நடராஜ், கவிதாமுருகன், கதிரவன், சவுந்தர், ஸ்ரீதர், நாகப்பன், சாகுல் ஹமீது, செந்தில்குமார், மாரிமுத்து, உமா மகேஸ்வரி பங்கேற்றனர். ஊராட்சி தலைவர் முருகன் நன்றி கூறினார்.
30-Nov-2024