உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயில் உண்டியல் காணிக்கை வேண்டுமாம்; கேட்கிறார்கள் நகராட்சி கவுன்சிலர்கள்

பழநி கோயில் உண்டியல் காணிக்கை வேண்டுமாம்; கேட்கிறார்கள் நகராட்சி கவுன்சிலர்கள்

பழநி : பழநி நகராட்சி பகுதிகளில் சுகாதார பணிகளை மேம்படுத்த பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கையில் 25 சதவீதம் பங்கு வழங்க வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.பழநி நகராட்சி கூட்டம் தலைவர் (தி.மு.க.,) உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கந்தசாமி(மார்க்சிஸ்ட்) நகரமைப்பு அலுவலர் புவனேஷ்வரன் முன்னிலை வகித்தனர்.

கவுன்சிலர்கள் விவாதம்

புஷ்பலதா (அ.தி.மு.க.,): வார்டில் உப்பு தண்ணீர் பைப் உடைந்து தண்ணீர் வராமல் உள்ளது.தலைவர்: நடவடிக்கை எடுக்கப்படும்.சுரேஷ் (தி.மு.க.,): சிவகிரி பட்டி, கோதைமங்கலம் ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைப்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.சுரேஷ் (தி.மு.க.,): அடிவாரம், திருஆவினன்குடி அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள முடிக்காணிக்கை மையம் ஆக்கிரமிப்பில் உள்ளது. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி நிலையம் உள்ள இடம் யார் பெயரில் உள்ளது.நகரமைப்பு அலுவலர்: திரு ஆவினன்குடி அருகே உள்ள முடி காணிக்கை மையம் நீதிமன்ற நடவடிக்கையில் உள்ளது. தண்டபாணி நிலைய இடம் சர்க்கார் புறம்போக்கு என்ற பெயரில் பதிய பெற்று சத்திரம் என்ற பெயரில் பட்டா உள்ளது.சுரேஷ் (தி.மு.க.,): துாய்மை பணியாளர்கள் 400 பேர் இருந்த இடத்தில் 80 பேர் மட்டுமே புரிந்து வருகின்றனர்.தலைவர்: பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.தீனதயாளன் (தி.மு.க.,): திருப்பதி கோயில் நிர்வாகத்தில் இருப்பது போல் கீழ் திருப்பதி நகராட்சிக்கு நிதி பங்கீடு வழங்கப்படுகிறது. இதுபோல் பழநி நகராட்சிக்கு கோயில் உண்டியல் காணிக்கையிலிருந்து 25 சதவீதம் நிதிப்பங்கிடு வழங்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Gopalasamy.k
அக் 30, 2024 19:24

அரசு செய்யவேண்டிய வேலைக்கு கோயில் பணம் எனில் அந்த வேலைக்கு ஒதுக்கப்பட்ட அரசு பணம் யாருக்கு? ஊழலுக்கு அடி போட வேண்டாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை