மேலும் செய்திகள்
மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல்
8 minutes ago
கொடை யில் அடர் பனிமூட்டத்துடன் சாரல் மழை
8 minutes ago
பழநியில் கூட்டம்
8 minutes ago
தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் 2026ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. எனவே தேர்தலுக்கு முன்னதாக, இறந்த வாக்காளர் பெயர் நீக்கம், இடம் மாறுதல், இரட்டைப்பதிவை நீக்கும் பொருட்டு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.,) மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணி நவ.4 முதல் நடக்கிறது. மாவட்டத்தில் 19 லட்சத்து 34 ஆயிரத்து 447 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணி வீடு, வீடாக சென்று துவங்கப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலை அடிப்படையாக எடுத்துக்கொண்டு, அக்.27 தேதியின்படி தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலோடு ஒப்பிட்டு எஸ்.ஐ.ஆர்., பட்டியல் தயாரிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 17, 18 வயது பூர்த்தியடைந்தவர்களிடமும் விவரங்கள் பெறப்பட்டு புதிய வாக்காளர்களாக இணைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, மாவட்டத்தில் மொத்தமுள்ள 2 ஆயிரத்து 124 ஓட்டுச்சாவடிகளிலும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் ஒத்துழைப்போடு 7 தொகுதிகளிலும் தீவிர பணி நடக்கிறது. இந்நிலையில், 25 நாட்களுக்கும் மேலாக நடந்த எஸ்.ஐ.ஆர்., பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மாவட்டத்தில் 19 லட்சத்து 34 ஆயிரத்து 447 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டதில், இதுவரை 15 லட்சத்து, 17 ஆயிரத்து 581 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளது. இருப்பினும் பலர் இன்னும் திரும்ப கொடுக்காமல் உள்ளனர். எனவே, இதுவரை படிவத்தை பூர்த்தி செய்து வழங்காதவர்கள் உடனடியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கவேண்டும். திரும்ப கொடுத்தால் மட்டுமே வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம்பெறும். இதன் மீதான ஆட்சேபனைகள், திருத்தங்களுக்கு பின்னர் அவகாசம் அளிக்கப்படும். அதே நேரத்தில், எஸ்.ஐ.ஆர்., பதிவேற்றம் செய்யும் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது. அதன்படி, 78.45 சதவீதம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மீதி உள்ள விண்ணப்பங்களை திரும்பப்பெற்று பதிவேற்றம் செய்யும் பணியில் அதிகாரிகள், அலுவலர்கள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
8 minutes ago
8 minutes ago
8 minutes ago