மின்னொளியில் மிளிரும் ராஜகோபுரம்
பழநி: பழநி முருகன் கோயில் அமைக்கப்பட்ட மின்னொளியில் ராஜகோபுரம் பல்வேறு வண்ணங்களில் இரவு நேரத்தில் ஒளிர்கிறது. பழநி முருகன் கோயிலில் ராஜகோபுரத்தில் ரூ.30 லட்சம் செலவில் வண்ண மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் பல்வேறு வண்ணங்களில் ராஜகோபுரம் முழுமையும் பிரகாசிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் தொலைவில் இருந்து கோயிலை பார்க்கும்போது ராஜ கோபுரம் மின்னொளியில் ஜொலிக்கிறது.