உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பிரேக் பிடிக்காமல் சென்ற அரசு பஸ் கல்லை போட்டு நிறுத்திய அவலம்

பிரேக் பிடிக்காமல் சென்ற அரசு பஸ் கல்லை போட்டு நிறுத்திய அவலம்

திண்டுக்கல்:' திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் முன் பிரேக் பிடிக்காமல் ஓடிய அரசு பஸ்சை கல்லை போட்டு நடத்துனர் நிறுத்தினர்.திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நேற்று 8 புதிய பஸ்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் பெரியசாமி, எம்.பி., எம்.எல்.ஏ., கலெக்டர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.அதே நேரம் வீரசின்னம்பட்டிக்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. பஸ்சில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பழநி பஸ்கள் வெளியேறும் வழியாக புறப்பட்ட அந்த பஸ் மதுரை பஸ்கள் வெளியேறும் வாசலுக்கு வந்தபோது திடீரென கார் ஒன்று வர டிரைவர் பிரேக்கை அழுத்தினார். பிரேக் பிடிக்காமல் பஸ் சென்று கொண்டே இருந்தது.சுதாரித்த டிரைவர் பஸ்சின் வேகத்தை குறைத்தார். உடனே கண்டக்டர் பஸ்சை விட்டு இறங்கி சாலை ஓரத்தில் கிடந்த கற்களை டயருக்கு முன் போட்டார். அதன் பின்னரே பஸ் நின்றது. இதையடுத்து பஸ் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். சிறிது நேரத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் பஸ் பிரேக்கை சரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை