உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தவிக்க விடுறாங்களே: முறையாக இல்லை மும்முனை மின் சப்ளை: பராமரிப்பு அலட்சியத்தால் அடிக்கடி மின்தடை

தவிக்க விடுறாங்களே: முறையாக இல்லை மும்முனை மின் சப்ளை: பராமரிப்பு அலட்சியத்தால் அடிக்கடி மின்தடை

-மாவட்டத்தில் வேளாண் தொழிலில் முக்கிய தொழிலாக உள்ளது. கிராம பகுதிகள் அதிகம் உள்ளதால் வேளாண் தொழில் சிறப்பாக நடந்து வருகிறது. நெல், தக்காளி வெங்காயம் ,முருங்கை மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை உட்பட பல்வேறு வகையான தானியங்கள், காய்கறிகளை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். பயிர்களை விளைவிக்க விவசாயிகள், கிணறுகள், போர்வெல்களில் உள்ள தண்ணீரை பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து தண்ணீரை வெளியே கொண்டுவர மும்முனை மின்இணைப்பு கொண்ட மின்மோட்டார்கள் பயன்படுத்தப்படுகிறது. தமிழக அரசு விவசாய மின்மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. இரவில் ஆறு மணி நேரம், பகலில் ஆறு மணி நேரம் என தினம் 12 மணி நேரம் மும்முனை சப்ளை கொடுக்கப்படுகிறது. ஆனால் சமீப காலமாக இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு மும்முனை சப்ளை வழங்கப்படுவது இல்லை. எந்த நேரம் மின் சப்ளை கொடுக்கப்படுகிறது என தெரியாமல் விவசாயிகள் கிணற்றடியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மின் பாதைகளில் குறுக்கிடும் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தாமல் விடுவதால் லேசாக காற்று அடித்தால் கூட மரக்கிளைகள் மின் கம்பிகளில் உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின் கம்பங்களில் கொடிகள் படர்ந்து மின் கசிவிற்கு வழிவகுக்கிறது. இவை முறையாக பராமரிக்கப்படாமல் அலட்சியம் காட்டப்படுவதால் விநியோகம் செய்யப்படும் ஆறு மணி நேரத்திலும் பல முறை மின்தடை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை