உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மூன்றாவது வின்ச் சேவை துவக்கம்

மூன்றாவது வின்ச் சேவை துவக்கம்

பழநி,:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் மூன்றாவது வின்ச் ரோப் மாற்றப்பட்டு நேற்று முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.பழநி முருகன் கோயிலுக்கு சென்று வர வின்ச், ரோப் கார், படிப்பாதை உள்ளன. மூன்று வின்ச் செயல்பட்ட நிலையில் மூன்றாவது வின்ச் ரோப் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றப்படுகிறது. இதன் மூலம் பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மூன்றாவது வின்சில் ரூ. 6 லட்சம் மதிப்பில் 450 மீட்டர் நீளம் கொண்ட ரோப் மாற்றப்பட்டது. அதையடுத்து சோதனை ஓட்டம் நடத்தி முடித்து நேற்று முதல் 3வது வின்ச் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ