உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 47 பவுன் நகை கொள்ளையில் திருப்புவனம் நபர்கள் கைது

47 பவுன் நகை கொள்ளையில் திருப்புவனம் நபர்கள் கைது

திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து 47 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில் -சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.திண்டுக்கல் பழநி ரோடு முருகபவனம் நைனார் முகமது தெருவை சேர்ந்தவர் சவரிமுத்து. தாடிகொம்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக உள்ளர். அக். 2ல் குடும்பத்தோடு வெளியூர் சென்றபோது வீட்டின் கதவை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 47 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர். போலீசார் விசாரணையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த அஜித்குமார் 25, ஆதீஸ்வரன் 29 திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து 30 பவுன் நகை, டூவீலரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை