உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கொடையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

 கொடையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர் விடுமுறையடுத்து சுற்றுலா பயணிகள் மலை நகரில் முகாமிட்டனர். பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை, வார விடுமுறையால் குளு, குளு நகரான கொடைக்கானலுக்கு ஏராளமான பயணிகள் குவிந்தனர். இதையடுத்து நகரில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரோஜா, பிரையன்ட் பூங்காக்கள், கோக்கர்ஸ் வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனூர் சுழல் சுற்றுலா மையம், பேரிஜம், உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ஏரி சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 23 இடங்களில் போலீசார் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். சில தினங்களாக வெட, வெடக்கும் உறைபனியின் தாக்கம் குறைந்ததால் குளிரின் தாக்கம் குறைந்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை