உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  செடிபட்டியில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

 செடிபட்டியில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே செடிபட்டியில் மழைக்கு சந்தான வர்த்தினி ஆற்றங்கரையில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததால் பஸ், கனரக வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கோபால்பட்டியில் சுற்று பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் கோபால்பட்டியில் இருந்து செடிபட்டி செல்லும் ரோட்டில் சந்தான வர்த்தினி ஆற்றங்கரையில் தடுப்புச் சுவர் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இதனால் ரோட்டில் ஒரு பகுதி சேதமடைந்தது.செடிபட்டி செல்லும் பஸ் ,கனரக வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கிராம மக்கள் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க தென்னை மட்டைகளை கொண்டு தடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். விபத்தை தடுக்க சேதமான தடுப்புச் சுவரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை