மேலும் செய்திகள்
தொழிலாளிக்கு ஆயுள்
26-Oct-2024
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பள்ளி சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி நந்தனார்புரம்பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் 25. 2023ல் 16 வயது பள்ளி சிறுமி ஒருவரிடம் பழகினார். பாண்டியராஜனுக்கு திருமணமான நிலையில் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பாண்டியராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் மைதிலி ஆஜரானார். பாண்டியராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.ஒரு லட்சம்அபராதமும் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.
26-Oct-2024