உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாயி கொலையில் ஒன்றரை ஆண்டுக்கு பின்- இருவர் கைது

விவசாயி கொலையில் ஒன்றரை ஆண்டுக்கு பின்- இருவர் கைது

நத்தம் : - நத்தம் அருகே விவசாயி கொலை வழக்கில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்- கொலையாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.நத்தம் அருகே எல். வலையபட்டியை சேர்ந்தவர் விவசாயி சின்னையா 45. 2023- நவம்பரில் வீட்டில் கட்டிலில் படுத்திருந்த போது சிலரால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். நத்தம் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், எஸ்.ஐ.,க்கள் கிருஷ்ணகுமார், தர்மர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் , தினேஷ் இருவரும் கொலை செய்தது தெரிந்தது.இதைதொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் இருவரும் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ