உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பணம் பறிப்பு இருவர் கைது

பணம் பறிப்பு இருவர் கைது

வேடசந்துார்: திருச்சி மாவட்டம், லால்குடி மோலாவாளாடி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் 24. இவர், வேடசந்துார் நாகம்பட்டி தனியார் நுாற்பாலையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். நேற்று வேடசந்துார் வந்துவிட்டு, விடுதி நோக்கி நடந்து சென்றார். அப்போது நாகம்பட்டியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் 19, வினோத் பாண்டி 19, கண்ணனை தள்ளிவிட்டு அவர் வைத்திருந்த ரூ. 1000, மொபைல் போனை பறித்து சென்றனர். கண்ணன் புகாரின் பேரில், வேடசந்துார் போலீசார், இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !