இளம்பெண் கொலை இருவரிடம் விசாரணை
திண்டுக்கல்: சீலப்பாடியை சேர்ந்தவர் மீனாட்சி 25. காலிபாட்டில், கம்பிகளை சேகரித்து விற்பனை செய்துவந்தார். தாடிக்கொம்பு செல்லமந்தாடி ரயில்வே பாலம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். சி.சி.டி.வி. கேமரா பதிவு, அலைபேசி சிக்னல் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். சந்தேக நபர்களான இரு இளைஞர்களின் நடமாட்டத்தை கவனித்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.