உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் பச்சிளம் குழந்தை உட்பட இருவருக்கு டெங்கு

திண்டுக்கல்லில் பச்சிளம் குழந்தை உட்பட இருவருக்கு டெங்கு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 1 வயது ஆண் குழந்தை உட்பட இருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி அடிக்கடி கனமழை பெய்கிறது. இதனால் வீடுகளின் சிமென்ட் சிலாப்கள்,ரோட்டோரங்கள்,தேவையில்லாத பொருட்கள்,உபயோகமில்லாத வாகன டயர்களில் தண்ணீர் தேங்கி டெங்கு கொசுக்களை பரப்பும்'ஏடிஸ்'கொசுக்களின் உற்பத்தி அதிகரித்தது. கொசு மருந்து அடிப்பவர்களும் தங்கள் பணியில் சுணக்கம் காட்ட டெங்கு காய்ச்சலின் ஆதிக்கம் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. அக்டோபரிலிருந்து ஒருசிலர் டெங்குவால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதியாகினர். அவர்களுக்கென தனி வார்டுகள் அமைக்கப்பட்டது. சிகிச்சை பெறும் நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்கு செல்வதும் ஒருசிலர் அனுமதியாவதுமாக இருந்தது. இதனிடையே நேற்று ஏராளமானோர் உடல்நலம் பாதிக்க திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். இதில் ஆத்துார் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த 1 வயது பச்சிளம் குழந்தை,நத்தத்தை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையறிந்த சுகாதாரத்துறை அலுவலர்கள் டெங்கு பாதிக்கப்பட்ட இருவரின் வீடுகள்,தெருக்களில் கொசு மருந்து அடிப்பது,நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ