உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  டூவீலர் திருட்டு: 2 இளைஞர்கள் கைது

 டூவீலர் திருட்டு: 2 இளைஞர்கள் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், ரவுண்ட்ரோடு பகுதியைச் சேர்ந்த தயானந்தன் 50, பண்ணப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் கவுண்டர், சுப்பிரமணி ஆகியோரின் டூவீலர்கள் உள்பட நகரின் பல்வேறு இடங்களில் டூவீலர் திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்தன. இதுகுறித்து நகர் டி.எஸ்.பி., கார்த்திக், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜசேகர் தலைமையிலான தனிப்படையினர் சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்ததில், திருட்டில் ஈடுபட்ட திண்டுக்கல், மாசிலாமணிபுரத்தை சேர்ந்த சர்க்கரை முகமது என்ற சகில் 23, பேகம்பூர், குட்டைக்குளம் ரோட்டை சேர்ந்த கார்த்திகேயன் 24 ஆகிய 2 பேரையும் போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 7 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி