உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவருக்கு உதயநிதி பாராட்டு

மாணவருக்கு உதயநிதி பாராட்டு

வேடசந்துார் : வேடசந்துார் காசிபாளையத்தை சேர்ந்தவர் ரத்தத்தின் பிரணவ் 17. சென்னை வேலம்மாள் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். செப்.4 ல் டெல்லியில் நடந்த பெனஸ்டா தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றார். அப்போது இவருக்கு பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது. மாணவரின் சாதனையை பாராட்டி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ரெத்தின் பிரணவ்வை சென்னைக்கு வரவழைத்து நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை