உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அமைச்சரிடம் ஒன்றிய செயலர்கள் வாழ்த்து

அமைச்சரிடம் ஒன்றிய செயலர்கள் வாழ்த்து

ஒட்டன்சத்திரம் : மாநில மாணவர் அணி தி.மு.க., துணைச் செயலாளரும் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருமான கா.பொன்ராஜ் தொப்பம்பட்டி மத்திய ஒன்றிய செயலாளராகவும், தலைமை பொதுக்குழு உறுப்பினரான எஸ்.ஆர்.கே.பாலு ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றிய செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இருவரும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் உணவுத்துறை அமைச்சருமான அர.சக்கரபாணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களை வாழ்த்திய அமைச்சர் 2026 சட்டசபை தேர்தல் வெற்றிக்கு முழு வீச்சில் களப்பணியாற்றிட கேட்டுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ