உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓட்டல்களில் சுகாதாரமில்லாத உணவுகள்; தினமும் ஒரு பிரச்னையால் மக்கள் தவிப்பு.. அவசியமாகிறது ஆய்வு

ஓட்டல்களில் சுகாதாரமில்லாத உணவுகள்; தினமும் ஒரு பிரச்னையால் மக்கள் தவிப்பு.. அவசியமாகிறது ஆய்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, பழநி, கொடைக்கானல், ஒட்டன் சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஒட்டல்கள் செயல்படுகின்றன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கில் வாடிக்கையாளர்கள் சென்று தங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுகின்றனர். சில ஓட்டல்களில் கையுறை,தலையுறை அணியாமல் சுகாதார மில்லாத பழைய காய்கறிகளை வைத்து உணவு பொருட்கள் தயாரிக்கப்படுவதாக அடிக்கடி வாடிக்கையாளர்கள் புகாரளிக்கின்றனர். சமீபத்தில் ஒரு ஓட்டலில் வாடிக்கையாளர் வாங்கிய உணவில் புழு நெளிந்து கொண்டிருந்தது. தரமில்லாத பொருட்களால் சுகாதாரமில்லாமல் தயாரிக்கப்படும் உணவு பொருட்களை சாப்பிடும் வாடிக்கையாளர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதியாகின்றனர். சிலருக்கு வாந்தி,பேதி போன்ற பிரச்னைகளும் ஏற்படுகிறது. இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தங்களது மவுனத்தை கலைத்து மாவட்டத்தில் செயல்படும் ஓட்டல்களின் உரிமையாளர்களை அழைத்து சுகாதாரமான உணவு பொருட்களை விற்பனை செய்ய அறிவுறுத்த வேண்டும். இதுமட்டுமில்லாமல் ஓட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் தரமாக உள்ளதா என்பது அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையாக அபராதம் விதிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை