உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயிலில் தங்கத்தொட்டில் புதுப்பிப்பு

பழநி கோயிலில் தங்கத்தொட்டில் புதுப்பிப்பு

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் தங்கத்தொட்டில் நேர்த்திக்கடன் செலுத்தும் அறை புதுப்பிக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இக்கோயிலில் இரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தங்கத்தொட்டிலிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். இதற்கு காணிக்கை ரூ.300 செலுத்தி பங்கேற்கலாம். இதனை கோயில் வலைதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். நேர்த்திக்கடன் நிறைவேற்றிய பிறகு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்படும். இதற்கான தங்கத்தொட்டில் அறை முருகன் கோயிலில் தங்கரதம் அறைக்கு அருகே உள்ளது. தற்போது ரூ.பல லட்சத்தில் தங்கத்தொட்டில், அறை புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் நேற்று முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்காக வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை