உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கல்குவாரி அமைக்க எதிர்ப்பு வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை

கல்குவாரி அமைக்க எதிர்ப்பு வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை

வேடசந்துார் : குருநாத நாயக்கனுாரில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வி.ஏ.ஓ., அலுவலகம் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குருநாத நாயக்கனுார் ஊராட்சியில் விவசாயம் , கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. இப்பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாகவும், வெடிகள் வெடிப்பதால் வீடுகளில் அதிர்வு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களிடம் கல்குவாரி அமைக்க கருத்து கேட்காமல் அனுமதி அளித்துள்ளது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்ற குமுறல் இப்பகுதி மக்களிடையே நீடித்து வருகிறது.இந்நிலையில் மீண்டும் புதிய கல்குவாரி அமைக்க அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்களிடையே கருத்து நிலவியது. இதையறிந்த கிராம மக்கள் நேற்று மதியம் 12:00 மணிக்கு கரட்டுப்பட்டியில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கல்குவாரி அமைக்க அனுமதி அளித்தால் வாக்காளர் அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை ஒப்படைப்போம் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி