உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கார்த்திகை தீபம் தீர்ப்பு; வி.எச்.பி., வரவேற்பு

 கார்த்திகை தீபம் தீர்ப்பு; வி.எச்.பி., வரவேற்பு

பழநி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்துாணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை வி.எச்.பி., மாநில தலைவர் ராமகிருஷ்ணன் வரவேற்றுள்ளார். அவரது அறிக்கை :திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திக்கை அன்று ( டிச. 3) தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை வரவேற்கிறோம். 1920ல் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. 100 ஆண்டுகளுக்கு மேலாக ஹிந்துக்கள் தொடர்ந்து மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என போராடி வந்தனர். அதற்கு இந்தாண்டு வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து ஹிந்து அமைப்புகளுக்கும், ஹிந்து சகோதரர்களுக்கும், வழக்கறிஞர் கு ழுவிற்கும், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக பாராட்டுகளை தெரிவிக்கிறோம். வீரத்துறவி ராமகோபாலனின் தவசக்தியே இந்த வெற்றிக்கு காரணம் என்பதை இந்த வேலையில் நாம் உணர்ந்து அவரை வணங்குவோம். அவரை நினைவு கூர்வோம் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி