உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நத்தம்: கிராம உதவியாளராக பணிபுரிந்து பணிக்காலத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும், புதிதாக சேர்ந்த கிராம உதவியாளர்களுக்கு நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும் என்பன உட்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நத்தம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத் தலைவர் தனபால் தலைமை வகித்தார். செயலாளர் வேம்பக்காத்தான், பொருளாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை