உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயிலை சொந்தமாக்கிட தனி நபர்கள் முயற்சி அறநிலையத்துறை அலுவலகத்தில் ஊர் மக்கள் முறையீடு

கோயிலை சொந்தமாக்கிட தனி நபர்கள் முயற்சி அறநிலையத்துறை அலுவலகத்தில் ஊர் மக்கள் முறையீடு

திண்டுக்கல்: திண்டுக்கல் கோயிலுாரையடுத்த வேம்பூரில் அனைத்து மக்களுக்குமான கோயிலை தனிநபர்கள் சொந்தம் கொண்டாடுவதாகவும், உண்டியல் வைத்து வசூலில் ஈடுபடுவதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர்.ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலகத்துக்கு வந்த கோவிலுார் அடுத்த வெம்பூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: வெம்பூர் தங்கச்சி அம்மாப்பட்டி பகுதியில் ஸ்ரீகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வெம்பூர், நல்லுார் உள்ளிட்ட 36 கிராமங்களைச் சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் வழிபாடு செய்து வருகிறோம். 2023 முதல் இக்கோயில் ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கோயில் உண்டியல் அறநிலையத்துறை அதிகாரிகளால் மூடி முத்திரையிடப்பட்டு 6 மாதங்களுக்கு ஒரு முறை திறக்கப்படுகிறது.இதனிடையே எங்கள் பகுதியை சேர்ந்த ஒருவர் தான் பரம்பரை அறங்காவலர் என்றும் , அவர் சார்ந்த சமுகத்தினர் மட்டுமே கோயிலில் வழிபாடு செய்யும் உரிமை இருப்பதாக கூறி,கோயில் உண்டியலுக்கு மேல் சில்வர் குடத்தை வைத்து தற்காலிக உண்டியல் தயார் செய்து, பக்தர்களை அதில் காணிக்கை செலுத்தும்படி வற்புறுத்தி வருகிறார்.ஏப்.14ம் தேதி கோயிலில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் பக்தர்கள் தரப்பில் ரூ.2 லட்சம் வரை பணமாகவும், தங்க நகைகளும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்த தற்காலிக உண்டியல் மூலம் அறங்காவலரே வசூலித்துவிட்டார். இதற்கு அறநிலையத் துறை அலுவலர்கள் சிலரும் உடைந்தையாக செயல்பட்டு வருகின்றனர். தற்காலிக உண்டியல் மூலம் அறங்காவலர் என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட பணம், நகையை கோயில் கணக்கில் மீட்டெடுக்கவும், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி