| ADDED : நவ 19, 2025 06:14 AM
திண்டுக்கல்: வ.உ.சிதம்பரனார் நினைவு நாளையொட்டி அவரின் சிலைக்கு தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பில் பழநி எம்.எல்.ஏ.,செந்தில்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேயர் இளமதி, மாநகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுஞ்செழியன், மாநகர நிர்வாகிகள் முகமது இப்ராகிம், அழகர்சாமி, சித்திக், பொருளாளர் மீடியா சரவணன், கலந்து கொண்டனர். அ.தி.மு.க.,சார்பில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தலைமையில் முன்னாள் மேயர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., பிரேம்குமார், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் வீரமார்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . வத்தலக்குண்டு : வெள்ளாளர் பெருமக்கள் சங்கம் சார்பில் வ.உ.சி., திரு உருவபடத்திற்கு தலைவர் ஜெயமாணிக்கம்பிள்ளை தலைமையில் துணைத்தலைவர் துரைப்பாண்டியன், செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் மாடசாமி முன்னிலையில் மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கப்பட்டது.