200 இடங்களை கைப்பற்றுவோம்
ஒட்டன்சத்திரம் : 2026 சட்டசபை தேர்தலில் 200க்கு மேற்பட்ட இடங்களை தி.மு.க., கூட்டணி கைப்பற்றும் '' என அமைச்சர் சக்கரபாணி பேசினார்.திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஒட்டன்சத்திரம் , தொப்பம்பட்டியில் நடந்த ஒட்டன்சத்திரம் சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடி முகவர்கள் , குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:தமிழக முதல்வர் சொன்ன வாக்குறுதிகள், சொல்லாத வாக்குறுதிகளை நிறைவேற்றி நடத்தி வருகிறார். 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைமையிலான திராவிட மாடல் அரசு 200க்கு மேற்பட்ட இடங்களை கைப்பற்றி மீண்டும் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப் பேற்பார் என்றார்.மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, அவைத்தலைவர் மோகன், தொகுதி பார்வையாளர் மணி, நகர செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், தங்கராஜ், சுப்பிரமணி, நகராட்சி தலைவர் திருமலைசாமி, ஒன்றிய தலைவர்கள் அய்யம்மாள், சத்தியபுவனா, மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் பொன்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் பாலு, செல்வராஜ், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் மலர்விழி செல்வி கலந்து கொண்டனர்.