உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஏன் இந்த கொலைவெறி? வணிக நிறுவனங்களில் தூய்மையற்ற குடிநீர் அவசியமாகிறது சுகாதார துறை நடவடிக்கை

ஏன் இந்த கொலைவெறி? வணிக நிறுவனங்களில் தூய்மையற்ற குடிநீர் அவசியமாகிறது சுகாதார துறை நடவடிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள், டீக்கடைகள், பேக்கரிகளில் மக்கள் அருந்தும் குடிநீரானது சுத்திகரிக்க படாததாகவும், துாய்மையின்றியும் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மாவட்டத்தில் வழக்கத்தை விடவும் இந்தாண்டு கூடுதலாக வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்களோடு, கால்நடைகள், பறவைகளும் அடிக்கடி ஏற்படும் தாகத்தை தணிக்க குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வணிக நிறுவனங்களான ஓட்டல்கள், பேக்கரி, பழ ஜூஸ், டீ கடைகளின் வெளியில் வைக்க பட்டிருக்கும் தாகம் அருந்தும் நீரானது ருசி தன்மை அற்றதாக , சுகாதாரம் அறவே இல்லாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இலவசமாக கிடைப்பதாலும் வழியின்றி பலரும் இந்த நீரை பருகி தாகம் தீர்க்கின்றனர். நீர் நிரப்பும் பாத்திரம் கூட சரியாக பராமரிக்க படாமல் சேதமாகவும், சுத்தமின்றி உள்ளதால் விதியை நொந்தபடி பொதுமக்கள் நகரும் சூழல் உள்ளது. பல ஓட்டல்கள், குளிர்பான கடைகளில் குடிநீரில் புழுக்கள் நெளியும் அளவிற்கு பழைய குடிநீரை பயன்பாட்டிற்கு வைத்துள்ளனர்.இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் கால்நடைகள், நாய்கள், காக்கைகள் உள்ளிட்ட பறவைகளும் குடிநீர் கிடைக்காமல் சாக்கடை நீரை அருந்தும் பரிதாபமான நிலைக்கு ஆளாகி உள்ளது. சுகாதார அதிகாரிகள் உணவு தன்மையோடு குடிநீரையும் ஆய்வு செய்ய வேண்டும் .......குடிநீர் பந்தல் அமைக்கலாம்தாகம் தணிப்பது புண்ணியத்தை சேர்க்கும் செயலுக்கு ஒப்பாகும். தொண்டு நிறுவனங்களும், சமூகஅமைப்புகளும் இந்த செயலை முன்னின்று நடத்தி ஆங்காங்கே கோடை காலத்திற்கேற்ப பிரதிபலன் பாராது இலவச குடிநீர் பந்தல்கள் அமைக்க வேண்டும். வீடுகள் தோறும் பறவைகள், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி அமைத்து பராமரிக்க வேண்டும். வணிக நிறுவனங்களும் இந்த விசயத்தில் மனித தன்மையோடு சேவை செய்ய முன்வர வேண்டும்.சங்கர், தனியார் ஊழியர், திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை