மேலும் செய்திகள்
காட்டுப்பன்றியால் சேதமான மக்காச்சோள பயிர்கள்
19-Nov-2024
நெய்க்காரப்பட்டி: பழநி சுற்று வட்டார பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதி அருகே உள்ள விளைநிலங்களில் வனவிலங்குகளால் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர்.பழநி சுற்றுவட்டார பகுதிகளில் விளை நிலங்களில் நெல், வாழை, மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி அருகே உள்ள நிலங்களில் விளை பொருட்கள் பயிரிடப்பட்டு உள்ளன. வனப்பகுதியில் இருந்து யானை, காட்டுப்பன்றி, மயில் போன்ற வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து விளைவிக்கபட்ட பயிர்களை சேதப்படுத்துகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். எனவே வனதுறையினர் வனவிலங்குகளை விளைநிலங்களுக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
19-Nov-2024