உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / காட்டுப்பன்றி வேட்டை: 6 பேருக்கு ரூ.2.40 லட்சம் அபராதம்

காட்டுப்பன்றி வேட்டை: 6 பேருக்கு ரூ.2.40 லட்சம் அபராதம்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 6 பேருக்கு வனத்துறை சார்பில் ரூ.2.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சிந்தலவாடம்பட்டி ராமபட்டினம் புதுார் மாட்டுப் பாதையை சேர்ந்தவர் மனோகரன் 60.இவரது தோட்டத்தை சுற்றி கட்டப்பட்டிருந்த கம்பியில் மின்சாரம் செலுத்தி மனோகரனுடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த சொக்கன் 47, முருகேசன் 60, பழனிச்சாமி 47, துரைச்சாமி 70, ராமசாமி 55, ஆகியோர் காட்டுப் பன்றியை வேட்டையாடினார். ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் இவர்கள் மீது வனஉயிரின குற்ற வழக்கு பதிவு செய்து ரூ.2.40 லட்சம் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை