உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போக்குகாட்டும் காட்டு யானைகள்

போக்குகாட்டும் காட்டு யானைகள்

தாண்டிக்குடி: தாண்டிக்குடி மலைப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துகிறது . சி ல மாதமா க இரண்டு காட்டு யானைகள் தாண்டிக்குடி, பண்ணைக்காடு, எதிரொலிப் பாறை, கொடலங்காடு, காமனுார் பகுதிகளில் முகாமிட்டு மலைவாழைகளை சேதப்படுத்தியது. நேற்று முன்தினம் கானல்அடி, தலைக்காடு பெருங்கானல், செப்புச்சுழி, கரியமால் பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் மலை வாழை, ஏலக்காய், தோட்டங்களில் அமைத்திருந்த குடிசைகள் ,விவசாய தளவாட பொருட்கள், பாசன பைப் லைன்கள் உள்ளிட்டவற்றை சேதப் படுத்தியது. சவ்சவ், பீன்ஸ் உள்ளிட்ட பந்தல் காய்கறிகளையும் விட்டு வைக்காது பந்தல்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் பாதித்தனர். வனத்துறை யானைகளை விரட்ட வெடிகளை வெடிக்க செய்த நிலையில் போக்கு காட்டி பட்டா நிலங்களில் உள்ள பயிர்களை மீண்டும் சேதப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. மேலும் சில யானைகள் புதிய வரவாக பெருங்கானலில் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல அச்சமடைந்துள்ளனர். இங்குள்ள யானைகளை பட்டா நிலங்களிலிருந்து தரைப்பகுதிக்கு விரட்ட வனத்துறை கூடுதல் குழு நியமித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி