வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திருட்டு கும்பல் அடுத்த முறை ஆட்சியில் அமர்ந்ததால் மேக்க மதினா இந்தியாவிலேயெ பார்க்கலாம். மதி கெட்ட மக்கள் இருந்தால் என்ன செய்வது
திண்டுக்கல் : பழநியில் பெருந்திட்ட வரைவு பெயரில் 5 முக்கிய வீதிகள் அகற்றப்பட உள்ளதாக வெளியான வரைபடம் வைரலாகி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதற்கு அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்கள் அவதியடைவதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.100 க்கும் மேற்பட்ட வீடுகளும் அகற்றப்பட்டன.இந்நிலையில் தற்போது பெருந்திட்ட வரைவு என்ற பெயரில் குறவன்பாறை, சன்னிதி வீதி, பூங்கா ரோடு, அய்யம்புள்ளி ரோடு, அருள்ஜோதி வீதி என 5 முக்கிய பகுதிகளை அகற்ற அரசு முயற்சிப்பதாக ஒரு வரைபடம் வைரலாகி வருகிறது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், கடைகள், மண்டப உரிமையாளர்கள் என 5000 ஆயிரம் குடும்பத்தினர் பீதியில் உள்ளனர். இது அதிகாரப்பூர்வ அறிவிப்பா வதந்தியா என தெரியாமல் நாளுக்கு நாள் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகமோ ,அதிகாரிகளோ எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் மவுனம் காத்து வருவது மேலும் மக்களை பீதியடைய செய்துள்ளது.என் மண் என் உரிமை குழுவின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது : பழநி பெருந்திட்ட வரைவு படம் ஒன்று தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி அருள்ஜோதி வீதி, பூங்கா ரோடு, குறவன் பாறை, அய்யம்புள்ளி ரோடு, சன்னதிவீதி உள்ளிட்ட 5 வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு அனுமதியில்லை என கூறி இடிக்க முயற்சி நடைபெறுகிறது. குறவன் பாறையில் உள்ள 300 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 1972 ன் படி குடியிருப்புகளுக்கோ ,கடைகள், மண்டபங்களுக்கு பிளான் அப்ரூவல் (வரைபடச் சான்றிதழ்) இருக்கிறதா என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதோடு அதற்கான ஆவணங்கள் இருந்தால் நகராட்சி அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட்டு விடுங்கள் என அலட்சியமாக கூறி உள்ளனர். இந்த வரைபடம் பொய்யானது மக்கள் நம்ப வேண்டாம் என்று கூட எவரும் தெரிவிக்க மறுக்கின்றனர். அப்படியொரு திட்டம் இல்லையென்றால், வரம்பு மீறிய கட்டடம் உள்ளதென்றால் நகராட்சி பகுதிகள் முழுவதுமே நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஆனால் குறிப்பாக 5 வீதிகளுக்கு மட்டுமே கொடுத்துள்ளனர். 40 ஆண்டுகளுக்கு முன்பு வரைபடச் சான்றிதழ் பெறாதது ஒன்றும் மக்களின் தப்பில்லை. இதனை வரை முறைப்படுத்தாத அரசின் தப்புதான். மக்களை அப்புறப்படுத்துவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. நீதிமன்ற உத்தரவு என கூறிக் கொண்டு பழனியில் 2 கி.மீட்டர் சுற்றுப்புறத்திலுள்ள ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்திருக்கிறது என்றார்.
திருட்டு கும்பல் அடுத்த முறை ஆட்சியில் அமர்ந்ததால் மேக்க மதினா இந்தியாவிலேயெ பார்க்கலாம். மதி கெட்ட மக்கள் இருந்தால் என்ன செய்வது