தலையில் கல்லைப்போட்டு பெண் கொலை
திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே, தலையில் கல்லைப்போட்டு பெண் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். திண்டுக்கல் நாகல்நகரில் ரயில் ஸ்டேஷன் அருகே அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இந்த பணிமனைகாம்பவுண்ட் சுவர் அருகே தினசரி இரவு துரித உணவுக்கடைகள் செயல்படுகின்றன. நேற்று காலை, துரித உணவுக்கடையின் மறைவுப்பகுதியில் 50 வயது பெண் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதாகதிண்டுக்கல் வடக்கு போலீசுக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணையில், பெண்ணின் தலையில் கல்லை துாக்கிப்போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. அருகே ரத்தக்காயத்துடன்கிடந்த கல்லை போலீசார் பறிமுதல் செய்தனர். மோப்பநாய் 'லக்கி' வரவழைக்கப்பட்டு சோதனைநடத்தப்பட்டது. இறந்தவர் யார், கொலை செய்தவர் யார் என சி.சி.டி.வி., கேமரா பதிவு உதவியுடன் போலீசார் விசாரிக்கின்றனர்.