மேலும் செய்திகள்
அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்
08-Oct-2024
மாவட்டத்தில் அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
09-Oct-2024
நத்தம் : '' தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் அச்சத்தில் நடமாட வேண்டிய சூழ்நிலை உள்ளதாக,'' முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.- திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் விலை உயர்வை கண்டித்து நத்தம் பஸ் ஸ்டாண்ட் அருகில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் அவர் பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில் போதை பொருட்கள் அதிகம் புழக்கத்தில் உள்ளது.கள்ளச்சாராய சாவை கட்டுப்படுத்த முடியாத தி.மு.க., அரசு திறமை இல்லாத அரசாக உள்ளது. தமிழகத்தில் விரைவில் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைய போகிறது. விலைவாசி ஏற்றத்தையும், சொத்து வரி, மின்கட்டண உயர்வு, வீட்டு வரி, குடிநீர் வரி உயர்வு போன்றவை இந்த ஆட்சியில் உயர்ந்து கொண்டே போகிறது. சட்டம் ஒழுங்கு சரிந்து மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி உள்ளது. இது தான் திராவிட மாடல் ஆட்சியா. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் வழங்கபட்ட நலத்திட்டங்களை தற்போது தி.மு.க., ஆட்சி அடியோடு ரத்து செய்துவிட்டது. பெண்களுக்கு, சிறுமிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் அச்சத்தில் நடமாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த மனித சங்கிலி போராட்டம் தி.மு.க., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றார்.அ.தி.மு.க., ஜெ பேரவை மாநில இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமை வகித்தார்.ஒன்றிய செயலாளர்கள் ராமராசு,சின்னு, மணிகண்டன், சுப்பிரமணி, மாவட்ட ஜெ. பேரவை இணை செயலாளர் , ஜெயபாலன் முன்னிலை வகித்தனர்.நகர அவைத் தலைவர் சேக்அலி வரவேற்றார்.மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன், மாவட்ட கவுன்சிலர்கள் சின்னாக்கவுண்டர், பார்வதி,ஒன்றிய ஜெ. பேரவை இணை செயலாளர் எம். ராஜேந்திரன்,மாவட்ட கவுன்சிலர்கள் சின்னாக்கவுண்டர், பார்வதி, ஊராட்சி தலைவர்கள் கண்ணன், ஆண்டிச்சாமி, ஜெயப்பிரகாஷ், சுப்பிரமணி, நகர்பொருளாளர் சீனிவாசன், மாவட்ட விவசாய அணி தலைவர் செல்லையா,எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் குப்பான் ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் விஜயன் கலந்து கொண்டனர்.குஜிலியம்பாறை : பாளையத்தில் நடந்த போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் மலர்வண்ணன், பெருமாள் தலைமை வகித்தனர். பாளையம் பேரூர் செயலாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சிவபாரதி பேசினார். வார்டு செயலாளர் ரவி நன்றி கூறினார்.வேடசந்துார்: பேரூர் செயலாளர் பாபுசேட் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஜான்போஸ் முன்னிலை வகித்தார். ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் பிரபுராம் பேசினார். நிர்வாகிகள் ஆறுமுகம், கார்த்தி, ராமலிங்கம், தேன்மொழி தங்கராஜ், பாண்டிகணேஷ் பங்கேற்றனர்.வடமதுரை : அய்யலுாரில் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். நகர செயலாளர் ராகுல் பாபா, மாவட்ட விவசாய அணி செயலாளர் டி.சி.ராஜமோகன், இணை செயலாளர் செல்லப்பாண்டியன், வர்த்தக அணி துணை செயலாளர் காளிதாஸ், எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகி முரளி பங்கேற்றனர். வடமதுரையில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் பழனிச்சாமி, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் தண்டாயுதம் பங்கேற்றனர்.பழநி : பழநியில் நகரச் செயலாளர் முருகானந்தம், பேரூர் செயலாளர்கள் சசிகுமார், விஜயசேகரன், பாலசமுத்திரம் பகுதியில் பேரூர் செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தனர். மாவட்ட பொருளாளர் வேணுகோபாலு, ஒன்றிய செயலாளர்கள் மாரியப்பன், முத்துசாமி, இளைஞரணி செயலாளர் அன்வர் தீன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா முஹம்மது பங்கேற்றனர்.கன்னிவாடி: கன்னிவாடியில் ஒன்றிய அவைத் தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். நகர செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தங்கத்தாய் பாண்டி, கூட்டுறவு சங்க தலைவர் தண்டபாணி, இளைஞரணி மாவட்ட தலைவர் மகேந்திரன், முன்னாள் ஊராட்சி தலைவர் சூடாமணி பங்கேற்றனர்.சின்னாளபட்டி: ஒன்றிய செயலாளர் மயில்சாமி தலைமை வகித்தார். நகர செயலாளர் சக்கரபாணி, பொதுக்குழு உறுப்பினர் சுகன், ஒன்றிய அவைத்தலைவர் பழனிச்சாமி, எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் அருளானந்தம், மகளிரணி இணைச் செயலாளர் ஆனிசோபிமிடில்டா, ஊராட்சி தலைவர் பேட்ரிக் பிரேம்குமார், ஒன்றிய கவுன்சிலர் அருள் வெண்ணிலா பங்கேற்றனர்.
08-Oct-2024
09-Oct-2024