தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் பகுதியில் 2016ல் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சித்தரேவு பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி ராமையாவை 50, ஒட்டன்சத்திரம் மகளிர் போலீசார் கைது செய்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கறிஞர் ஜோதி வாதாடினார். ராமையாவுக்கு 10 ஆண்டு சிறை , ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பு கூறினார்.