உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பிரம்ம கமலம் பூத்ததால் வழிபாடு

பிரம்ம கமலம் பூத்ததால் வழிபாடு

வடமதுரை: பிரம்ம கமலம் பூத்ததையடுத்து பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர். பிரம்ம கமலம் வருடம் ஒரு முறை மட்டுமே இரவில் மலரக்கூடிய அபூர்வ வகை மலர் பூக்கக்கூடிய தாவரம். பொதுவாக ஜூலை மாதத்தில் இரவில் மலர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் சுருங்கி, குவிந்து விடும். வடமதுரை, அண்ணாநகரில் புவனேஸ்வரி என்பவரது வீட்டில் வளரும் இத்தாவரத்தில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் பூ மலர்ந்தது. இதையடுத்து அப்பகுதியினர் பூஜை செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !