உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சீன மொழி தெரிந்தால் தான் அரசு பஸ்சில் ஏற முடியும்!: திண்டுக்கல்லில் திக் திக்

சீன மொழி தெரிந்தால் தான் அரசு பஸ்சில் ஏற முடியும்!: திண்டுக்கல்லில் திக் திக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசு பஸ் ஒன்றின் பெயர் பலகை சீன மொழியில் இருந்ததால் பயணிகள், எந்த ஊருக்கு செல்லும் பஸ் எனத்தெரியாமல் திக்குமுக்காடினர்.திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி,கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் செல்கின்றன. இந்த அரசு பஸ்களில் டிஜிட்டல் பெயர்பலகைகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் தமிழ் மொழிகளில் ஊர் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும்; அதை பார்த்து பயணிகள் தாங்கள் செல்லும் ஊர்களுக்கு செல்கின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5wgthdm4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பஸ் தயாராக இருந்தது.பஸ்சின் பின் பகுதியில் உள்ள டிஜிட்டல் பெயர்பலகைகளில் வழக்கத்திற்கு மாறாக தமிழும் இல்லாமல், ஆங்கிலமும் இல்லாமல் வித்தியாசமான மொழியிலிருப்பது போன்று ஊர் பெயர்கள் பதிவாகியிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் திக்குமுக்காடினர். சிலர் கண்டக்டர், டிரைவரிடம் கேட்டு பஸ்சில் ஏறி பயணித்தனர். தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டதாகவும், டிஜிட்டல் புரோகிராமை மாற்றியதும் இயல்பு நிலைக்கு வந்துவிடும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Ramesh Sargam
ஏப் 28, 2024 11:41

அன்று கச்சத்தீவை ஸ்டாலின் அப்பா கருணாநிதி இலங்கைக்கு விற்றார், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்துகொண்டு இன்று அவரின் மகன் ஸ்டாலின், திண்டுக்கல்லை சீனாவுக்கு விற்று விட்டார் போலும் இதுவும் காங்கிரஸ் கூட சேர்ந்துகொண்டா அல்லது தனித்தா??


அப்புசாமி
ஏப் 26, 2024 11:48

தத்திங்களா... இந்த தொழில்நுட்பம் கூட சீனாவிலிருந்து வாங்கணுமா? சீக்கிரம் தமிழ்நாட்டையே சீனாக்காரன் வாங்கிடப் போறாண். நீங்கள்ளாம் ஒரு கெவருமெண்ட், உங்களுக்கு ஓட்டுப் போட்டவனெல்லாம் மறத்தமிழனுங்க.


Baskaran Sethuraman
ஏப் 26, 2024 08:53

டிஜிட்டல் பலகை வாங்க சீனாவிடம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதோ ?????


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 26, 2024 05:32

தமிழ் வாழ்க சைனா வெல்க இலங்கையில் சைனா துறைமுகம் இப்போது பின்னர் இலங்கையை சைனா தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததும் தமிழகம் கச்சதீவு சீனஇலங்கையோடு இனைத்து கச்சதீவு மீட்டெடுக்கபடும் திட்டம்


Boss incog
ஏப் 28, 2024 08:38

அருமையான நக்கல் திமுகவுக்கு புரியுமா??


Barakat Ali
ஏப் 25, 2024 21:03

சீன அடிமை அரசு டுமீலு நாட்டில் செயல்படுவதால் இது சகஜம் இந்த அடிமை அரசு அகன்றால் நிலை மாறும்


Dharmavaan
ஏப் 25, 2024 20:41

இதெல்லாம் திருட்டு மூடர் கூட்டம் சீனாவுக்கு கொடுக்கும் சிக்னல் நான் உன் ஆதரவாளன் என்று இதை முளையில் கிள்ள வேண்டும் இல்லையேல் நாட்டுக்கு பேராபத்து செய்தவனை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்


enkeyem
ஏப் 25, 2024 20:32

சீன மொழிக்கும் ஹிந்திக்கும் வித்தியாசம் தெரியாமல் சும்மா உருட்டாதே குடும்ப கட்சி கொத்தடிமை


Kuppan
ஏப் 25, 2024 19:39

அருணாசலத்தில் சீனா சீன பெயர் வைத்தது போல் திண்டுக்கல் பெயரையும் சீனா சீன மொழியில் மாற்றி விட்டது எனலாமா ?


Rathinakumar KN
ஏப் 25, 2024 19:29

ராக்கெட் ஏவுதளம் விளம்பரத்தில் சீனா கோடி இப்போது பேருந்தில் சீனா மொழி


Bhakt
ஏப் 25, 2024 19:25

ஜப்பான் நாட்டு துணை முதலைவராக இருந்த போது வாங்கியதோ???


மேலும் செய்திகள்



புதிய வீடியோ