உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / இளம் பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர் தேர்வு திண்டுக்கல்லில் பிப்.2ல் நடக்கிறது

இளம் பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர் தேர்வு திண்டுக்கல்லில் பிப்.2ல் நடக்கிறது

திண்டுக்கல், : ''கிரிக்கெட் இளம் பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர் வீரர்கள் தேர்வு திண்டுக்கல்லில் பிப்.2ல் நடப்பதாக'' திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் அமர்நாத் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: 13 வயது முதல் 21 வயது வரை உள்ள பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பர்கள் தேர்வு செய்து பயிற்சியளிக்க தமிழக கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பேட்ஸ்மேன்கள், கீப்பர்கள் தங்களது பெயரை பதிவு செய்யலாம். இணைச்செயலர், திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், விக்னேஷ் ஸ்போர்ட்ஸ், கான்வென்ட் ஸ்கூல் பில்டிங், திண்டுக்கல் என்ற முகவரியில் விண்ணப்பத்தினை பெற்று ரேஷன்கார்டு நகலுடன் பதிவு செய்ய வேண்டும். திண்டுக்கல், தேனி, கரூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வீரர்கள் தேர்வு நடைபெறும். பிப்.2ம் தேதி காலை 8:00 மணி முதல் திண்டுக்கல் பெஸ்கி கல்லுாரி அருகிலுள்ள் எம்.வி.எம்., நகர் 6 கிராஸ், வலைப்பயிற்சி மைதானத்தில் தேர்வு நடைபெறும். விவரங்களுக்கு 96556 63945, 98428 77275ல் அணுகலாம் என குறிப்பிட்டுடள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை