மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா
13-Jan-2025
பெருந்துறை:பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி தாளாளர் வெங்கடாச்சலம் தலைமை வகித்தார். முதல்வர் வேதகிரி ஈஸ்வரன் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக ஈரோடு கொங்கு நேஷனல் பள்ளி தாளாளர் தேவராஜா கலந்து கொண்டார். விழாவையொட்டி துறை வாரியாக தனித்தனியே பொங்கல் வைத்து மாணவ மாணவிகள் மகிழ்ந்தனர். கொங்கு ஐ.டி.ஐ., மாணவ-மாணவியரும் பங்கேற்றனர்.விழாவில் கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவர் குமாரசாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர், கல்லுாரி துணை முதல்வர் செந்தில்குமார், கொங்கு ஐ.டி.ஐ., முதல்வர் தினேஷ்குமார், துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
13-Jan-2025