உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நகை பறித்த மந்திரவாதிமீண்டும் வந்ததால் கைது

நகை பறித்த மந்திரவாதிமீண்டும் வந்ததால் கைது

நகை பறித்த மந்திரவாதிமீண்டும் வந்ததால் கைதுஈரோடு:ஈரோடு, கருங்கல்பாளையம், சேக்கிழார் வீதியை சேர்ந்த ஜெகநாதன் மனைவி கஸ்துாரி, 77; தனக்கு தெரிந்த சிலர் கூறியதால், திருப்பத்துார், ஆம்பூரை சேர்ந்த மந்திரவாதி பாரூக், 64, என்பவரை தனது வீட்டு கடந்த பிப்.,9ல் அழைத்து ஜோதிடம் பார்த்து பூஜையும் செய்துள்ளார். அப்போது நைச்சியமாக பேசி வளையல், மோதிரம் என எட்டு பவுன் நகைகளை வாங்கி சென்றுள்ளார். திருப்பியும் தரவில்லை. இந்நிலையில் சேக்கிழார் வீதிக்கு நேற்று முன்தினம் பாரூக் வந்துள்ளார். இதையறிந்த கஸ்துாரி, தன் சகோதரர் உள்ளிட்ட அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து அவரை பிடித்து, கருங்கல்பாளையம் போலீசில் ஒப்படைத்தார். புகாரின்படி பாரூக்கை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை