உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளிஸ்கேட்டிங் போட்டியில் சாதனை

கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளிஸ்கேட்டிங் போட்டியில் சாதனை

கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளிஸ்கேட்டிங் போட்டியில் சாதனைசென்னிமலை:ஈரோடு மாவட்ட அளவிலான ரோலிங் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்-25 போட்டி, ஈரோடு அருகேயுள்ள டெக்ஸ்வேலி மஹாலில் நடந்தது. இதில் சென்னிமலை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 18 பேர் பங்கேற்றனர். இதில் நான்கு பேர் முதலிடம், ஐந்து பேர் இரண்டாமிடம், மூன்று பேர் மூன்றாமிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி அறக்கட்டளை தலைவர் ரங்கசாமி, பள்ளி தாளாளர் மணி, பொருளாளர் தங்கமுத்து, பள்ளி முதல்வர் முத்துக்கருப்பன் மற்றும் நிர்வாகத்தினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி