உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பணியின் போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

பணியின் போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

பணியின் போது உயிர் நீத்ததீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலிஈரோடு:தீயணைப்பு பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு, ஈரோடு மாவட்ட தீயணைப்பு துறையினர் சார்பில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட தீயணைப்புத்துறை அலுவகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன், மாவட்ட உதவி அலுவலர் கணேசன், கலைச்செல்வன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். வரும், 20ம் தேதி வரை தீயணைப்புத்துறை சார்பில் தீத்தொண்டு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பள்ளி, கல்லுாரி, அரசு அலுவலகம், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தீ விபத்தை கையாள்வது, மீட்பு பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தீயணைப்போர் தியாகிகள் தினம், தீத்தொண்டு வாரம் மாவட்டம் முழுவதும் கடைபிடிக்கப்படும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை