உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., கவுன்சிலர் ௫ பேர் புறக்கணித்தநகராட்சி கூட்டத்தில் 73 தீர்மானம் பாஸ்

தி.மு.க., கவுன்சிலர் ௫ பேர் புறக்கணித்தநகராட்சி கூட்டத்தில் 73 தீர்மானம் பாஸ்

தி.மு.க., கவுன்சிலர் ௫ பேர் புறக்கணித்தநகராட்சி கூட்டத்தில் 73 தீர்மானம் 'பாஸ்'கோபி:கோபி நகராட்சியில் அ.தி.மு.க.,வுக்கு, 13 கவுன்சிலர்கள், தி.மு.க.,வுக்கு, 17 கவுன்சிலர்கள் உள்ளனர். கடந்த ஜன.,30ல் நடந்த நகராட்சி மாதாந்திர கூட்டத்தில், 'வார்டு பணிகள் நடக்கவில்லை எனக்கூறி தி.மு.க., கவுன்சிலர்கள் ஐந்து பேர், அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 13 பேர், தீர்மானத்தை ஒத்தி வைக்க கோரி, சேர்மன் நாகராஜிடம் தனித்தனியாக மனு கொடுத்தனர். எஞ்சிய தி.மு.க., கவுன்சிலர்கள், 11 பேர் தீர்மானத்தை நிறைவேற்ற மனு கொடுத்தனர். இதனால் மறுதேதி குறுப்பிடாமல், கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்., மாதத்துக்கான கூட்டம் நடக்காத நிலையில், நேற்று காலை கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. சேர்மேன் நாகராஜ், கமிஷனர் சுபாஷினி தலைமை வகித்தனர். கூட்டம் குறித்த செய்தி சேகரிக்க, மீடியாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சேர்மன் நாகராஜ் உட்பட தி.மு.க., கவுன்சிலர்கள், 12 பேர் பங்கேற்றனர். எஞ்சிய தி.மு.க., கவுன்சிலர்களான சவுரியம்மாள், சுமதி, சரோஜா, குமார சீனிவாஸ், செல்வி பங்கேற்கவில்லை. அதேசமயம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 13 பேரும் கூட்டத்துக்கு சென்றனர்.சிறிது நேரத்தில் வந்த, கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வன், பிரினியோ கணேஷ் கூறுகையில், 'நகராட்சி எரிவாயு தகன பூங்காவை திறக்காமல் தாமதம் செய்கின்றனர். வார்டு மற்றும் தெருவிளக்கு பிரச்னையை முறையாக கையாளவில்லை. அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளோம். நாங்கள் தெரிவித்த குறைகள் நிவர்த்தி செய்யவில்லை. அதனால் கூட்டத்தை ஒத்தி வைக்க கோரி, சேர்மனிடம் மனு கொடுத்துவிட்டு, 13 கவுன்சிலர்களும் வெளியேறி உள்ளோம்' என்றனர். கூட்டத்தில், 73 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சேர்மேன் தெரிவித்தார். மேலும் நகராட்சி எரிவாயு தகன பூங்கா, வரும், 24ம் தேதி முதல் செயல்படும் என சேர்மேன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ