உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயிலில் ஏற முயன்றபோதுதவறி விழுந்த பரிசோதகர்

ரயிலில் ஏற முயன்றபோதுதவறி விழுந்த பரிசோதகர்

ரயிலில் ஏற முயன்றபோதுதவறி விழுந்த பரிசோதகர்ஈரோடு, :கோவை, பெரிய நாயக்கன்பாளையம், ஜி.கே.டி. நகரை சேர்ந்தவர் தியானேஸ்வரன், 39; ரயில் பயண சீட்டு பரிசோதகர். கோவை-சென்னை சேரன் விரைவு வண்டியில் கடந்த, 2ம் தேதி இரவு பி-2,3,4 பெட்டிகளில் பணியில் ஈடுபட்டிருந்தார்.அன்று நள்ளிரவில் ஈரோடு ஸ்டேஷனில் ரயில் நின்றது. பி-3 பெட்டியில் இருந்து தியானேஸ்வரன் கீழே இறங்கி நின்று கொண்டிருந்தார்.அப்போது பயணி ஒருவர் டீ வாங்கி கொண்டு படிக்கட்டில் நின்றிருந்தார். ரயில் கிளம்பியதால் படிக்கட்டில் ஏற முற்பட்ட தியானேஸ்வரன், தவறி தண்டவாள பாதையில் விழுந்ததில் பலத்த காயமடைந்தார். ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஈரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை