உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூர் தாலுகா அலுவலகத்தில்வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்

அந்தியூர் தாலுகா அலுவலகத்தில்வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்

அந்தியூர் தாலுகா அலுவலகத்தில்வருவாய் துறையினர் ஆர்ப்பாட்டம்அந்தியூர்:தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், அந்தியூர் தாலுகா அலுவலகத்தில், நேற்று மாலை, ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் நடந்தது.சங்கத்தின் வட்ட கிளை தலைவர் அய்யனார் தலைமையில், 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரசு திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கு கொண்டு சேர்க்கும் தலையாய பணியை மேற்கொள்ளும் வருவாய் துறை, அரசின் அச்சாணியாக விளங்குகிறது.ஆனால் அலுவலர்களுக்கோ பணி நெருக்கடி அதிகரித்துள்ளது. இதற்கு தீர்வு காணாவிட்டால், அனைவரும் மன உளைச்சல், அழுத்தத்துக்கு ஆளாகும் நிலை ஏற்படும்.இதற்கும், நிலுவை கோரிக்கைகளுக்கும் அரசு விரைந்து தீர்வு காண வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தாசில்தார் கவியரசும் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !