சொத்து வரி உயர்வைதிரும்ப பெற மனு
சொத்து வரி உயர்வைதிரும்ப பெற மனுஈரோடு:ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ,. தலைவர் செந்தில் தலைமையிலான கட்சியினர், மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி பகுதியில் மாநகராட்சியில் வீடுகள், வணிக கட்டடங்களுக்கு பல மடங்கு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டணம், பத்திர பதிவு கட்டணம் உயர்ந்துள்ளது. இத்துடன் சொத்து வரி உயர்வும் மேலும் சுமையை கொடுப்பதாக உள்ளது. வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலான சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப பெற்று பழைய சொத்து வரியை வசூலிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.