நீரேற்று நிலையத்தில் பராமரிப்புகுடிநீர் வினியோகத்தில் பாதிப்பு
நீரேற்று நிலையத்தில் பராமரிப்புகுடிநீர் வினியோகத்தில் பாதிப்புஈரோடு:ஈரோடு மாநகராட்சி துணை கமிஷனர் தனலட்சுமி விடுத்துள்ள அறிக்கை: மாநகராட்சிக்கு குடிநீர் எடுக்கும், வரதநல்லுாரில் உள்ள ஊராட்சி கோட்டை குடிநீர் தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் மாநகராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் நாளை வரை குடிநீர் வினியோகம் போதிய அளவு வழங்க இயலாது. பராமரிப்பு முடிந்த பின் வினியோகம் சீராகும். மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.