உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேன் மீது சரக்கு லாரிமோதி 16 பேர் காயம்

வேன் மீது சரக்கு லாரிமோதி 16 பேர் காயம்

வேன் மீது சரக்கு லாரிமோதி 16 பேர் காயம்காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளியிலுள்ள பனியன் நிறுவனத்தில், வேலை செய்பவர்களை ஏற்றிச் செல்லும் டாடா வேன் நேற்று முன்தினம் இரவு 8:45 மணியளவில், 16 பேருடன் காங்கேயம் திருப்பூர் ரோடு ஜேசீஸ் பள்ளி அருகே முத்துாரை நோக்கி சென்றது. அப்போது எதிரே ஈரோடு மாவட்டம், கம்பளியம்பட்டியை சேர்ந்த சக்திவேல், 25, என்பவர் ஓட்டி வந்த சரக்கு லாரி, வேன் மீது மோதியது.இதில் வேனில் இருந்த ஓட்டுனர் உட்பட 16 பேரும் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை