உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவியிடம் மொபைல் பறித்த பீஹார் இளைஞர் கைது

மாணவியிடம் மொபைல் பறித்த பீஹார் இளைஞர் கைது

பெருந்துறை: கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அமீனாபீபி, 20. இவர், பெருந்-துறை வாய்க்கால் மேட்டிலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்-லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த, 9ம் தேதி இரவு 9:00 மணியளவில் பெருந்துறை அடுத்த மேட்டுக்கடையில் மொபைல்போன் பேசிக் கொண்டு நடந்து சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர், அமீனாபீபியிடம் இருந்து மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பினார். பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி, பீஹார் மாநிலம், சம-சுதிபூரை சேர்ந்த தர்வீந்தர் குமார், 19, என்பவரை நேற்று கைது செய்தனர். இவர், மேட்டுக்கடையிலுள்ள ஒரு தனியார் எண்ணெய் மில்லில் வேலை செய்து வருகிறார். தர்வீந்தர் குமாரை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை