உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயத்தில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

காங்கேயத்தில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

காங்கேயம்: காங்கேயம், திருப்பூர் ரோடு நீலக்காட்டு புதுாரை சேர்ந்த மனைவி கண்ணம்மாள், 64; நீலக்காட்டுபுதுாரில் மளிகை கடை அருகே நடந்து சென்றபோது, டூவீலரில் வந்த மர்ம ஆசாமிகள் இருவர், 5.5 பவுன் தாலிக்கொடியை பறித்தனர். கண்ணம்மாள் சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் பைக்கை அதிவேகமாக இயக்க, நகையை பறித்த ஆசாமி, பைக்கிலிலிருந்து விழுந்தான். மற்றொரு ஆசாமி பைக்குடன் பறந்து விட்டான். சிக்கிய ஆசாமியை காங்கேயம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் உடுமலை, மடத்துக்குளத்தை சேர்ந்த சூர்யஜகதீஷ், 29, என்பது தெரிந்தது. பைக்குடன் தப்பிய ஆசாமி பவானியை சேர்ந்த சந்தோஷ், என தெரிந்தது. சூர்யஜகதீஷை கைது செய்த போலீசார், 5.5 பவுன் தாலிக்கொடியை மீட்டனர். தலைமறைவான சந்தோஷை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி